மும்பையில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள்... ஜூஹூ கடற்கரை, மெரீன் டிரைவ் பகுதிகளில் குவிந்த மக்கள் கூட்டம்

0 3072

மும்பையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து பல மாதங்களாக வீடுகளில் அடைபட்டுக் கிடந்த பொதுமக்கள் நேற்று பெருந்திரளாக வெளியே கிளம்பிவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜூஹூ கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதே போன்று மும்பையின் இதயம் என்று வர்ணிக்கப்படும் மெரீன் டிரைவ் கடற்கரையை ஒட்டிய நீளமான நடைபாதையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இடைவெளியைக் கடைபிடிக்குமாறும் தவறாமல் முகக் கவசம் அணியுமாறும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

முகக்கவசம் அணியாதவர்களைப் பிடித்து காவல்துறையினர் அபராதம் வசூலித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments