டோக்கியோ பாராலிம்பிக் போட்டி - ஒரே நாளில் பல்வேறு உலக சாதனைகள்

0 4118

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் நேற்று பல்வேறு உலக சாதனைகள் படைக்கப்பட்டன.

மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சீன வீராங்கனை Xia Zhou, பந்தய தூரத்தை 27 புள்ளி 17 விநாடிகளில் கடந்து புது உலக சாதனை படைத்தார்.

தாய்லாந்து 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் Pongsakorn Paeyo 46 புள்ளி 61 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்று புது உலக சாதனை படைத்தார்.

ஆடவர் 400 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் இஸ்ரேல் வீரர் Mark Malyar 4 நிமிடம் 31 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்று, ரியோ ஒலிம்பிக்கில் படைத்த முந்தைய சாதனையை முறியடித்து புது உலக சாதனை படைத்தார்.

ஜப்பான் வீரர் Naohide Yamaguchi, ஆடவர் 100 மீட்டர் நீச்சலில் 1 நிமிடம் 3 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்து தங்கம் வென்றார். அதேபோல் மகளிரில் ஸ்பெயின் வீரங்கனை Michelle Alonso Morales 1 நிமிடம் 12 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments