சென்னை கொளத்தூரில் 625 கோடி மதிப்பில் புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் கூடுதல் மின் பளு மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்சனையைத் தவிர்க்க 625 கோடி ரூபாய் மதிப்பில் 8 ஆயிரத்து 905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியை சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கொளத்தூர் பகுதியில் மொத்தம் 6 இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்மாற்றியின் இயக்கத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி முடித்த 353 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களையும் பயிற்சி சான்றிதழ்களையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பெரம்பூர் கௌதமபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் தரம் குறித்தும் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Comments