மீண்டும் குண்டுவெடிப்பு ஆப்கனில் உச்சக்கட்ட பதற்றம்

0 5122
மீண்டும் குண்டுவெடிப்பு ஆப்கனில் உச்சக்கட்ட பதற்றம்

கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் ஆப்கானியர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களும், அமெரிக்க படைகளை சேர்ந்த 13 பேரும் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க ராணுவ விமானங்கள் கடைசியாக காபூலில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் அங்கு மீண்டும் ஒரு தற்கொலை தாக்குலை நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், காபூல் விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து, ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. 

குண்டுவெடிப்புச் சம்பவத்தில், ஒரு குழந்தை உட்பட 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்புச் சம்பவத்தால், காபூலில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இதற்கிடையே, ISIS-K என்ற ஐ.எஸ்.ஐ.எஸ் கிளை அமைப்பின் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என ராய்ட்டர்ஸ் நிறுவனத்தை மேற்கோள்காட்டி, ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

இதனிடையே, ஐ.எஸ்.ஐ.எஸ் முகாம்களை குறிவைத்து, ஜலாலாபாத்தில் கடந்த 26ஆம் தேதி அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காபூல் விமான நிலையத்தில், தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு, காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு தயாரானவர்களை அவர்கள் வசித்த இடத்திலேயே அமெரிக்க இராணுவம் குண்டுவீசி தாக்கி அழித்துள்ளதாக, தாலிபான்கள் தரப்பில் கூறியிருப்பதாக, அமெரிக்க செய்தி நிறுவனமாக Associated Press செய்தி வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments