ராமர் கோவிலை பார்வையிட்டு பூஜை செய்தார் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்
ராமர் இல்லை என்றால் அயோத்தி இல்லை என கூறியுள்ள குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், அயோத்தியில் ராமர் நிரந்தரமாக இருப்பதாக தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை பார்வையிட்டு பூஜை செய்த பின், ராமாயணம் குறித்த கருந்தரங்கு ஒன்றை துவக்கி வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
அயோத்தி என்றால் வெற்றி கொள்ள முடியாத ஒன்று என பொருள் உள்ளதாக குறிப்பிட்ட ராம் நாத் கோவிந்த் எனவே இந்த நகருக்கு அந்த பெயர் பொருத்தமானது என்றார்.
அதன் பின்னர் சிறப்பு ரயில் மூலம் குடியரசு தலைவர் லக்னோ திரும்பினார்.
Comments