சீனாவில் 130 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட கேளிக்கை பூங்கா, செப்-1 முதல் சோதனை ஓட்டத்துக்காகத் திறப்பு
சீனாவில் உள்ள யுனிவர்சல் பெய்ஜிங் ரிசார்டிற்குள் கடந்த 4 ஆண்டுகளாக கட்டப்பட்ட கேளிக்கை பூங்கா செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சோதனை ஓட்டத்திற்காக திறக்கப்பட உள்ளது.
தலைநகர் பெய்ஜிங்கில் 990 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள யுனிவர்சல் பெய்ஜிங் ரிசார்டில் 130 ஏக்கர் பரப்பளவில் கேளிக்கை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
56,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கேளிக்கை பூங்காவில் பார்வையாளர்களுக்கு பரவசமூட்டும் விதமாக Jurassic Park, Transformers, Harry Potter போன்ற ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதைப் போல் பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Comments