கர்ப்பிணி உட்பட 2 பேர் கொலை... சொத்துக்காக அரங்கேறிய பயங்கரம்... மனிதநேயம் மரித்துப் போனதற்கு சான்று

0 8222

ந்திராவில் சொத்து பிரச்சனையில் சித்தியையும், அவரது கர்ப்பிணி மகளையும் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்தின் பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்போகும் நேரத்திலும் உடன்பிறந்தவனை காப்பாற்ற நினைத்த கர்ப்பிணி தங்கையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சட்டனப்பள்ளியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் தனது தாய் பத்மாவதியுடன் வசித்து வந்தார்.

லட்சுமி நாராயணன் குடும்பத்திற்கும் அவரது பெரியப்பாவான மதுசூதனராவ் குடும்பத்திற்கும் இடையே ஏற்கனவே சொத்து தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு லட்சுமிநாராயணன் வீட்டுக்கு மதுசூதனராவின் மகன் சீனிவாசராவ் வந்த போது வீட்டில் பத்மாவதியும், அவரது 3 மாத கர்ப்பிணி மகள் லட்சுமி பிரத்யுஷாவும் இருந்துள்ளனர்.

அப்போது, சொத்து பிரச்சனையை பேசி தகராறு செய்த சீனிவாசராவ் , சித்தியையும், சித்தி மகளான கர்ப்பிணி தங்கையையும் கத்தியால் குத்தி கொடூரமாக தாக்கியுள்ளான். இதனை எதிர்வீட்டில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த பத்மாவதி உடனடியாக இறந்துவிட்ட நிலையில், உயிர் போகும் நேரத்திலும் அண்ணனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என எண்ணிய லட்சுமி பிரத்யுஷா, லட்சுமி நாராயணனுக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூறி ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறியது நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

பதறியடித்துக் கொண்டு லட்சுமி நாராயணன் வீட்டுக்கு ஓடி வருவதற்குள் சகோதரி பிரத்யுஷாவும் உயிரிழந்துவிட்டார்.

இரண்டு பெண்கள் கண் முன்னே கொடூரமாக கொல்லப்பட்ட போதிலும், எதிர்விட்டில் சிலர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தது மனிதநேயம் மரித்துப் போனதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, கொலையாளியான சீனிவாசராவ் சட்டனப்பள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments