குடியில் மூழ்கி குடும்பத்தை கவனிக்க மறந்த கணவன் கொலை ; மனைவி கைது

0 9429
குடியில் மூழ்கி குடும்பத்தை கவனிக்க மறந்த கணவன் கொலை ; மனைவி கைது

நாமக்கல்லில் குடியில் மூழ்கி குடும்பத்தை கவனிக்க மறந்த குடிகார கணவனின் கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகள் இருவரும் நிர்கதியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ரகுபதி - அருணா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2 நாட்களுக்கு முன் வழக்கம்போல் வீட்டில் சாப்பிட்டுவிட்டு உறங்கிய ரகுபதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார். ரகுபதியின் கழுத்தில் காயங்கள் இருந்ததை கண்டு மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. முதலில் எதுவுமே தெரியாது என்று கூறிய மனைவி அருணா, பின்னர் கணவனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

கூலி வேலைக்கு சென்று வந்த ரகுபதி, வேலைக்கு செல்லும் பணத்தில் முழுவதும் குடித்துவிட்டு வந்து தன்னையும், மகன்களையும் அடித்து துன்புறுத்தி வந்ததால் மன விரக்தியில் ஆடு கட்டுவதற்கு பயன்படுத்தும் நைலான் கையிறு மூலம் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments