இடா சூறாவளி அமெரிக்காவின் லூசியானாவை தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை
மெக்சிகோ வளைகுடா பகுதியை கடந்து வரும் சக்திவாய்ந்த இடா சூறாவளி அமெரிக்காவின் லூசியானவை தீவிரமாக தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிதீவிர சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ள இடாவால் மணிக்கு 225 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று லூசியானா ஆளுநர் எச்சரித்துள்ளார். அதீத மழை மற்றும் கடல் சீற்றத்தால் கடலோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
16 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரத்தை Katrina சூறாவளி கபளீகரம் செய்ததில் ஆயிரத்து 800 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Comments