நிரந்தர வைப்பு நிதியில் கால் பதிக்கிறது கூகுள் பே நிறுவனம்
கூகுள் நிறுவனம் தனது கூகுள் பே செயலி மூலமாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு வைப்பு நிதி வசதியை ஏற்படுத்த உள்ளது. இதற்காக ஃபின்டெக் சேது என்ற நிறுவனத்துடன் கூகுள் இணைந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஓராண்டு வைப்பு நிதிக்கு அதிகபட்சமாக 6 புள்ளி 35 விழுக்காடு வட்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்கள் ஆதார் எண் அடிப்படையில் ஒரு முறை கடவுச் சொல் மூலம் இணையலாம் என கூறப்பட்டுள்ளது.
ஈக்விட்டாஸ் சிறு நிதி வங்கியில் இந்தக் கணக்கு தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள கூகுள் நிறுவனம், அந்த வங்கியில் கணக்கு இல்லையென்றாலும் கூகுள் பேயில் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments