புதுச்சேரி சுருக்குமடி வலை பிரச்னை - 3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

0 3168
புதுச்சேரி சுருக்குமடி வலை பிரச்னை - 3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

புதுச்சேரியில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 3 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் ஆகிய மீனவ கிராம மக்கள் இடையே சுருக்கு மடி வலை பிரச்னை தொடர்பாக நேற்று கடும் மோதல் ஏற்பட்டது .

இதனை தடுப்பதற்காக நல்லவாடு பகுதியில் ஒரு முறை துப்பாக்கிச்சூடும், தேங்காய்திட்டு முகத்துவாரம் பகுதியில் நடந்த மோதலை தடுக்க 14 முறை வானத்தை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

மோதல் நடந்த 3 மீனவ கிராமங்களின் கடலோர பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு, மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments