2022 இறுதிக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் - வெற்றிகரமாக அரங்கேறிய ராக்கெட் எரிபொருள் சோதனை
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராக்கெட் எரிபொருள் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, இந்தியாவில் இருந்து முதன் முதலாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக ‘ககன்யான்’ என்ற பெயரில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டப் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
அதன் முக்கிய அம்சமாக, விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டுக்கான திரவ எரிபொருள் சோதனை நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் சுமார் 450 விநாடிகள் நடைபெற்றது. இந்த சோதனை வெற்றியடைந்ததாக இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments