புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி போராடிய விவசாயியை இழுத்துச் சென்று தடியால் தாக்கிய காவல்துறையினர்
அரியானா மாநிலம் கர்ணாலில் சுங்கச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒருவரைக் காவல்துறையினர் இழுத்துச் சென்று சுற்றி நின்று தடிகளால் தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்திக் கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் இருந்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரியானாவின் கர்ணாலில் சுங்கச்சாவடியில் விவசாயிகள் காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாயினர்.
விவசாயி மீதான தாக்குதலைக் கண்டித்து அரியானாவின் பல பகுதிகளிலும் விவசாய சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். பல்வேறு சுங்கச்சாவடிகள் முற்றுகையிடப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments