ஜோதிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு, தனிநபர் நம்பிக்கையில் உத்தரவு பிறப்பிக்க முடியாது - நீதிபதி

0 2330
ஜோதிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு, தனிநபர் நம்பிக்கையில் உத்தரவு பிறப்பிக்க முடியாது - நீதிபதி

ஜோதிட மூடநம்பிக்கையால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிய மனுதாரரின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

மதுரையைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஜோதிட மூட நம்பிக்கை பல இளைஞர்களின் வாழ்க்கையை பாதித்து, அவர்களை குற்றவாளிகளாகவும், போதை அடிமைகளாவும் மாற்றுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், தனிநபர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டுள்ளதால், மனுதாரர் கோருவது போல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்தனர். இந்த பிரபஞ்சம் உருவானது குறித்த அறிவியல் என்பது ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், அண்டம் குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் விடை காண முடியவில்லை என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், மூட நம்பிக்கைகளை களைய மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments