விழாக்காலங்களில் மக்கள் பெருமளவில் கூடுவதை அனுமதிக்க வேண்டாம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
வரவிருக்கும் விழாக்காலங்களில் பெருமளவில் மக்கள் கூடுவதை அனுமதிக்க வேண்டாம் என மாநிலங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்புக்கான வழிகாட்டுதல்களை செப்டம்பர் இறுதி வரைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.
இது குறித்து மாநிலங்களுக்கு உள்துறைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், சில மாவட்டங்களில் கொரோனா தொற்றுப் பாதிப்பும், நோயாளிகள் எண்ணிக்கையும் தொடர்ந்து கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
சோதனை, தொடர்புகள் கண்டறிதல், மருத்துவம், தடுப்பூசி, கொரோனா தடுப்புக்கான சூழல் ஆகிய ஐந்து உத்திகளில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Comments