புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் ; ஓபிஎஸ் கூறிய பாடல் வரிகளால் பேரவையில் சிரிப்பலை
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறதா இல்லையா என அவை முன்னவர் துரைமுருகன் கேட்டபோது, நதியினில் வெள்ளம்-கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் தன் தற்போதைய நிலைமை என ஓபிஎஸ் கூறிய பாடல் வரிகளால் சிரிப்பலை எழுந்தது.
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவா? எதிர்ப்பா? என துரைமுருகன் கேள்வி எழுப்பினார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், தீர்ப்புக்கு பிறகுதான் பதில் கூறமுடியும் என எதிர்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் பதிலளித்தார்.
ஆதரவா? எதிர்ப்பா? என துரைமுருகன் மீண்டும் கேட்டபோது, நதியினில் வெள்ளம் பாடலை பாடி, இதுதான் என் தற்போதைய நிலைமை எனக் கூறினார். மேலும் தன்னுடைய நிலைமை என்னவென்று அவை முன்னவருக்கு தெரியும் என ஓபிஎஸ் கூறியதால் சிரிப்பலை எழுந்தது.
Comments