டிசம்பரில் டிஜிட்டல் பணத்தின் முதல் சோதனை தொடங்கக் கூடும் - சக்திகாந்த தாஸ்
டிசம்பர் மாதத்தில் சோதனை முறையில் டிஜிட்டல் பணப்புழக்கம் தொடங்கக் கூடும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
புழக்கத்தில் உள்ள பணத்தாளின் மதிப்பைப் போல் இணையவழியில் பணத்தைப் பயன்படுத்துவது டிஜிட்டல் பணம் எனக் கூறப்படுகிறது. சீனா உள்ளிட்ட பல நாடுகளில் டிஜிட்டல் பணப்புழக்கம் இருக்கும் நிலையில் இந்தியாவில் அதை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கைகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆராய்ந்து வருகிறது.
டிஜிட்டல் பணத்தின் பாதுகாப்பு, பணக்கொள்கையிலும், புழக்கத்தில் உள்ள பணத்தாளின் மீதும் அதன் தாக்கம் ஆகியன இதில் கருத்திற்கொள்ளப்படும்.
Comments