ஆதரவாளர்களை துப்பாக்கி வாங்க அறிவுறுத்தி புது சர்ச்சையில் சிக்கிய பிரேசில் அதிபர்
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ தற்போது தன் ஆதரவாளர்களை துப்பாக்கி வாங்க அறிவுறுத்தி புது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அதிபர் மாளிகையான Alvorada பேலஸ் முன் திரண்ட ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிய போல்சனேரோ, விவசாயியாக இருந்தாலும் சரி, விஞ்ஞானியாக இருந்தாலும் சரி, துப்பாக்கி வைத்து இருப்பவர்களை யாராலும் அடிமைப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
பீன்ஸ் வாங்குபவர்கள் துப்பாக்கி வாங்க நினைப்பவரை சீண்டாதீர்கள் என எச்சரித்துள்ளார். போல்சனேரோவின் துப்பாக்கி கலாச்சார பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.
Comments