காபூல் விமான நிலையத்தில் ஆபத்து நீங்கி விடவில்லை -அமெரிக்கா
ஆப்கான் தலைநகர் காபூலில் இரண்டு கொடூர குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு மேலும் ஆபத்தான சூழல் நிலவுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட, நம்பகமான எச்சரிக்கைகள் விடப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடைசி நாள் வெளியேற்றத்துக்குப் பின் காபூல் விமானநிலையம் ஆப்கான் மக்களின் கையில் ஒப்படைக்கப்படும் என்றும் அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இரட்டை குண்டு வெடிப்புச் சம்பவத்தால் ஜோ பைடன் அரசு உலகளவில் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தாலிபன் இயக்கமும் பொறுப்பேற்க மறுத்துவிட்டது.மறக்கமாட்டோம், மன்னிக்க மாட்டோம். இதனை நிகழ்த்தியவர்களைத் தேடிப்பிடித்து வேட்டையாடுவோம் என்று ஜோ பைடன் அறிவித்திருந்தார்
Comments