தக்காளி விலை கடும் வீழ்ச்சி ; சந்தைக்குக் கொண்டுவந்த தக்காளிகளைச் சாலையில் சிந்திய விவசாயிகள்

0 4194
சந்தைக்குக் கொண்டுவந்த தக்காளிகளைச் சாலையில் சிந்திய விவசாயிகள்

மகாராஷ்டிர மாநிலம் நாசிக், அவுரங்காபாத் மாவட்டங்களில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்தால், சந்தைக்குக் கொண்டுவந்த தக்காளிப் பழங்களைச் சாலையில் குவியலாகப் போட்டுவிட்டு விவசாயிகள் சென்றனர்.

தக்காளி நல்ல விளைச்சல் கண்டுள்ள நிலையில் நாசிக், அவுரங்காபாத் சந்தைகளில் ஒரு கிலோ 2 ரூபாய், 3 ரூபாய் என்கிற அளவிலேயே விற்பனையாகிறது. பறித்த கூலி, வண்டிச் செலவு ஆகியவற்றுக்குக் கூட இந்த விலை கட்டுப்படியாகாததால் தக்காளியைக் கொண்டுவந்த விவசாயிகள் அவற்றைப் பெட்டி பெட்டியாகச் சாலையில் கொட்டினர்.

டிராக்டர்களில் குவியலாகக் கொண்டுவந்த தக்காளிகளையும் இதேபோல் சந்தைக்கு வெளியே குவித்துவிட்டுச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments