காபூல் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்பின் தலைவன் இருக்கலாம் என தகவல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலின் பின்னணியில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐஎஸ் முகமான மாவலாவி அப்துல்லா என்கிற அஸ்லம் ஃபாரூக்கி-யின் கைங்கர்யம் இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
லஷ்கர் இ தொய்பா, தெஹ்ரீக்-இ-தாலிபான் ஆகிய தீவிரவாத இயங்கங்களோடு தொடர்பில் உள்ள அஸ்லம் ஃபரூக்கி, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் பாகிஸ்தான் கிளை அமைப்பான ISKP-யின் தலைவராக இருக்கிறான்.
குருத்வாரா மீதான தாக்குதல் வழக்கில் காபூல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஸ்லம் ஃபரூக்கி, தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு, அவனை விடுவித்துள்ளனர். இந்நிலையில், இந்த அதிபயங்கர சதித்திட்டத்தை திட்டமிட்டு, அப்பாவி மக்களை கொன்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments