ஈமு கோழி பண்ணை நடத்தி, முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த நபருக்கு 10 ஆண்டு சிறை - ரூ.1.20 கோடி அபராதம்

0 4214
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈமு கோழி பண்ணை நடத்தி, முதலீட்டாளர்களிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈமு கோழி பண்ணை நடத்தி, முதலீட்டாளர்களிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஈமு கோழிகளின் மீது 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய், ஆண்டு இறுதியில்  20 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகை என கவர்சியான திட்டங்களை அறிவித்து , 51 பேரிடம் 1 கோடியே 33 லட்சம் வசூலித்து ஏமாற்றிய வழக்கில் கோவை முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தங்கவேலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தங்கவேலுவின் பங்குதாரர் தனசேகரன் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments