கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு அனுமதி: தடை கோரிய மனு தள்ளுபடி

0 2955
கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக, காவல்துறை மேல்விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக, காவல்துறை மேல்விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த அனுபவ் ரவி என்பவர் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கின் எந்த கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும் என்றும், காவல்துறை விசாரணை என்பது, நீதிமன்ற வழக்கு விசாரணையை சற்று தாமதப்படுத்தினாலும், குற்றம் தொடர்பான உண்மையை கண்டறிவதில் உதவியாக இருக்கும் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களையும், விவரங்களையும் வைத்து பாரபட்சமற்ற, நியாயமான நேர்மையான விசாரணையை தொடர காவல்துறைக்கு எவ்வித தடையும் இல்லை எனவும், காவல்துறை தாக்கல் செய்யும் ஆவணம் மற்றும் அறிக்கையை ஏற்பதா வேண்டாமா என விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும் எனவும் நீதிபதி தெளிவுபடுத்தி உள்ளார். மேல்விசாரணைக்கு தடை கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments