4 டோல்கேட்டுகளில் சுங்கவசூல் நிறுத்தம்.! பேக்கேஜிங் டெண்டர் நடைமுறை வாபஸ்.!

0 5358
சென்னையில், OMRல், மெட்ரோ ரயில் பணி தொடங்க உள்ளதால், 4 சுங்கச் சாவடிகளில், சுங்க வசூல் நிறுத்தப்படும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். சாலை பணிகளுக்கு பேக்கேஜிங் முறையில் டெண்டர் விடும் நடைமுறையை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், OMRல், மெட்ரோ ரயில் பணி தொடங்க உள்ளதால்,  4 சுங்கச் சாவடிகளில், சுங்க வசூல் நிறுத்தப்படும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். சாலை பணிகளுக்கு பேக்கேஜிங் முறையில் டெண்டர் விடும் நடைமுறையை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவையில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, மானியக் கோரிக்கையில், அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மெட்ரோ ரயில் பணிகள் தொடங்க உள்ளதால், ஓஎம்ஆரில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில், வருகிற 30ஆம் தேதி முதல் சுங்க வசூல் நிறுத்தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத்திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ், 2200 கி.மீ மாநில நெடுஞ்சாலைகள், அடுத்த 10 ஆண்டுகளில் 4 வழித்தட சாலைகளாகவும், அகலப்படுத்தப்படும் என்றார்.

திருச்சி மாநகரிலும், மதுரை மாநகரிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்பொருட்டு, உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

நபார்டு வங்கி உதவியுடன், 425 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 75 ஆற்றுப்பாலங்கள் கட்டப்படும் என்றும், 10 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுள்ள, ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் தரம் உயர்த்தப்படும் என்றும், அமைச்சர் அறிவித்துள்ளார்.

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்காக, மதுரை சுற்றுச்சாலையில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு, வாகன சுரங்கப் பாதை அமைக்கப்படும் என்றார்.

சென்னைக்கு வெளியே சென்னசமுத்திரம், நெமிலி, வானகரம், சூரப்பட்டு, பரனூர் ஆகிய 5 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்க இருப்பதாகவும், அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தமிழக அரசுக்கு ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் சாலை பணிகளுக்கு பேக்கேஜிங் முறையில் டெண்டர் விடும் நடைமுறையை கைவிடுவதாக அமைச்சர் எவ வேலு அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் சுமார் 140 மீட்டர் நீளம் கொண்ட கடல்சார் நடைபாலம் 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளதாக, துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments