தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிப்பு

0 31314

தமிழகத்தில் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் நாட்கள் குறித்து உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்றும், இதேபோல், முதுகலை, முதுநிலை 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை அறிவியல், பொறியியல், சட்டம், விவசாயம் சார்ந்த 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களிலும் வகுப்புகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments