சூரிய ஒளி விழுந்து பொன்னொளியில் காட்சியளித்த காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கம்..
அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவிலில் கருவறையில் சூரிய ஒளி விழுந்து சிவலிங்கம் பொன்னொளியில் காட்சியளித்தது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த சவுந்தரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 5 நாட்கள் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு நடைபெறும்.
சூரியபகவான் ஒளிக்கதிர்களால் அபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபடுவதாக நம்பப்படுகிறது. இன்று காலை 5.50 மணியளவில் சூரியன் உதயமாகி, ஒளிக்கதிர்கள் நேரடியாக கருவறையிலுள்ள லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது. இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது.
Comments