கோவையில் 2 பிஞ்சுக் குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட நேபாளப் பெண்
கோயம்புத்தூரில் தங்கி வேலை பார்த்த நேபாளப் பெண் ஒருவர் 2 பிஞ்சுக் குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நேபாளத்தைச் சேர்ந்த ஆதித்யா பண்டாரியும், அவரது மனைவி தன்கலாவும் குப்பனூரில் உள்ள தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். கணவன் பஜங் ஜில்லா வேலைக்கு செல்லும் முன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் மனைவி வேலைக்கு வராததால் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கண்ணாடி ஜன்னலை ஆதித்யா உடைத்து பார்த்த போது தன்கலா இரண்டு குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Comments