மறுசுழற்சி முறையில் தயாரான ராக்கெட்டை ஏவியது புளூ ஆரிஜின் நிறுவனம்
அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ்சின் ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், சார்பில் முற்றிலும் மறுசுழற்சி முறையில் தயாரான ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ்சில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் செலுத்தப்பட்டு புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு 11 நிமிடங்களுக்கு பின் இரு பிரிவாக தரையிரக்கப்பட்டன.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக ராக்கெட் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ராக்கெட்டின் பூஸ்டர் மற்றும் கேப்சூல் தனித் தனியாக பிரிக்கப்பட்டு தரையிறக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் ஜெப் பெசாஸ் குழுவினரின் விண்வெளி பயணத்திற்கு பின் அந்நிறுவனம் செலுத்திய முதல் ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments