மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா புத்தக பையில் இடம்பெற்றுள்ள ஜெ., இ.பி.எஸ்., புகைப்படங்களை மாற்ற வேண்டாம் என முதல்வர் கூறியுள்ளார் - அமைச்சர்

0 6061

ள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா பாட புத்தகப் பைகளில் இடம்பெற்றிருந்த முன்னாள் அதிமுக முதலமைச்சர்களின் புகைப்படங்கள் அப்படியே இருக்கட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையுடன் விட்டுவிட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பேரவையில் பேசிய அவர், புத்தக பைகளில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை மாற்றுவதற்கு 13கோடி ரூபாய் செலவாகும் என்ற முதலமைச்சரிடம் தாம் கூறிய நிலையில், அதற்கு மறுத்துவிட்ட முதலமைச்சர் அந்த தொகையை வேறு பயனுள்ள திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட 32,599 கோடி ரூபாய் நிதி மக்களின் வரிப்பணம் எனவும், அவற்றை முழுமையாகவும், முறையாகவும் மாணவர்களுக்கு பயன்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்ததாகவும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments