திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா - பக்தர்களுக்கு தடை
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்நிலையில், ஆவணி திருவிழாவில் அதிகளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் 5-ம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள் பிரகாரங்களிலேயே நடைபெறும் என்பதால், பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் எனவும், திருவிழா நிகழ்வுகளை பக்தர்கள் வீட்டில் இருந்தே நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments