மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடந்த வன்முறைகள் ; 9 வழக்குகளை பதிவு செய்தது சிபிஐ

0 2119
சிபிஐ 9 வழக்குகளை பதிவு செய்து விசாரிக்கிறது

மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடந்த வன்முறைகளில், பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் பற்றிய விசாரணையை துவக்கியுள்ள சிபிஐ, அது தொடர்பாக 9 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

அதற்காக சிபிஐயின் 4 சிறப்பு புலனாய்வு குழுக்கள், கொல்கத்தாவில் இருந்து குற்றங்கள் நடந்ததாக கூறப்படும் இடங்களுக்கு சென்றுள்ளன. பெண்களுக்கு எதிரான சில குற்ற வழக்குகளில், தற்போது மாநில போலீசார் விசாரிக்கும் வழக்குகளும் விரைவில் சிபிஐ-க்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வெடித்த வன்முறைகளில், பெண்கள் மீதான குற்றச்செயல்களை மட்டும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என கொல்கத்தாவின் 5 நீதிபதி அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments