உணவு வழங்கல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கையுறை கட்டாயம் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
உணவு வழங்கல் பணிகளில் ஈடுபடுபவர்கள் கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உணவு பொருட்களை பார்சல் செய்யும் பேப்பர்களை பிரிக்க உமிழ்நீரையும், கவர்களை திறக்க ஊதவும் செய்வதால் தொற்று பரவல் அதிகரிக்கும் என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, உணவு பொருட்களை கையாள்பவர்கள் உமிழ்நீர் தொட்டு பயன்படுத்தக்கூடது என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், பொதுமக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்றனர். வருமுன் காப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து, உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை செயலாளர்கள் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.
Comments