காவல்துறையை சேர்ந்த 1,850 பேருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில், துப்பாக்கிகளை எவ்வாறு கையாள்வது, எப்படி குறி பார்த்து சுடுவது என்பது குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் பணியாற்றும் ஆயிரத்து 850 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பசுமலை பட்டியில் உள்ள காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுகிறது.
வரும் 4ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில், சாதாரண துப்பாக்கி முதல், டபுள் பேரல், ஏகே 47 ரகம் மற்றும் பிஸ்டல் ரக துப்பாக்கிகனை பயன்படுத்தி காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
Comments