புதிய தேசிய டிரோன் விதிகளை அறிவித்தது மத்திய அரசு
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதிய தேசிய டிரோன் விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, சுமந்து செல்லும் பொருட்களுடன் டிரோன்களின் எடை அல்லது டிரோன் டாக்சிகளின் எடை 300 கிலோவில் இருந்து 500 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டிரோன்களை பதிவு செய்யவோ அல்லது உரிமம் பெறவோ பாதுகாப்பு தடையில்லா சான்றிதழ் பெறத் தேவையில்லை. அனுமதிக் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட அங்கீகார எண், ரிமோட் பைலட் அங்கீகாரம் உள்ளிட்ட பல ஒப்புதல்களும் சான்றிதழ்களும் தேவையில்லை. விதிகளை மீறினால் விதிக்கப்படும் அதிகபட்ச அபராதம் ஒரு லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
டிரோன் சரக்கு போக்குவரத்துக்கு என்று டிரோன் வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும். டிரோன்கள் பறக்கும் பகுதிகள் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்படுத்தப்பட்டு ஏர்போர்ட்டுகளில் இருந்து அவை பறப்பதற்கான தூரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய டிரோன் கொள்கைகளை அமல்படுத்த 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Comments