கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் சீசன் தொடங்குவதற்கு முன்பே வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன.
ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை வெளிநாட்டு பறவைகள் கோடியக்கரைக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கியுள்ளன.
ரஷ்யா நாட்டிலிருந்து கூழைகிடா, இலங்கையிலிருந்து பூநாரை மற்றும் கரண்டி மூக்குநாரை, சைபீரியாவில் இருந்து உள்ளான் வகையைச் சேர்ந்த பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலா பறவைகள், அண்டார்டிகாவில் இருந்து கடற்காகம் உள்ளிட்ட 18 வகையான வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன.
Comments