வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயமாக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
செப்டம்பர் முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதைக் கட்டாயமாக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் சாலை விபத்தில் உயிரிழந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்துக்கு 14 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், உரிமையாளர் மற்றும் ஓட்டுநருக்கு மட்டுமே காப்பீடு எடுத்துள்ளதாகவும், சடையப்பன் ஓட்டுநராக வாகனத்தை இயக்கவில்லை என்றும், அவர் சம்பளம் பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் சுட்டிக் காட்டியது. ஓட்டுநர் அல்லாதவரின் இறப்புக்கு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்க முடியுமென்றும் தெரிவித்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வைத்தியநாதன், ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்தார். செப்டம்பர் முதல் விற்கப்படும் அனைத்துப் புதிய வாகனங்களுக்கும் உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் வகையில், ஐந்து ஆண்டுகளுக்குக் காப்பீடு செய்வதைக் கட்டாயமாக்க உத்தரவிட்டார்.
Comments