நீட் தேர்வு, இருமொழி கொள்கையில் அரசு நிலைப்பாட்டிற்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் - செங்கோட்டையன்

0 4276
நீட் தேர்வு, இருமொழி கொள்கையில் அரசு நிலைப்பாட்டிற்கு அதிமுக உறுதுணையாக இருக்கும்

நீட் தேர்வு, இருமொழி கொள்கை ஆகியவற்றில் அரசு எடுக்கும் நிலைப்பாட்டிற்கும், முடிவுகளுக்கும் அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளர்.

பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், நாடே வியக்கத்தக்க வகையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிமுக ஏழரை சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரை திராவிட இயக்கங்களை தவிர மற்ற எவராலும் காலூன்ற முடியாது என்பதை மக்கள் நிலைநாட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments