ஓணம் பண்டிகை கொண்டாட்டம் எதிரொலி ; கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை
தினசரி கொரோனோ தொற்று எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், கேரளாவும் மகாராஷ்டிரமுமே முக்கிய காரணம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை பதிவான 46 ஆயிரத்து 164 என்ற தொற்று எண்ணிக்கையில், கேரளாவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 31 ஆயிரத்து 445 என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் புதன்கிழமை பதிவான மொத்த எண்ணிக்கையில் இது சுமார் 70 சதவிகிதமாகும்.
கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதமும் 19 சதவிகிதத்தை தாண்டி நிற்கிறது. ஒரே நாளில் அங்கு 215 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். தொற்று அதிகரிக்கும் என்ற மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையையும் மீறி, ஓணம் பண்டிகை கால கொண்டாட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி அளித்ததன் விளைவாக கேரளாவில் இந்த அளவுக்கு அபாயகரமான அளவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 5 நாட்களுக்குப் பிறகு தினசரி தொற்று எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
Comments