சிம்பு -தயாரிப்பாளர்களுடனான விவகாரத்தில் சுமுக முடிவு... 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்

0 3993

நடிகர் சிம்பு மீதான ரெட் கார்ட் தடையை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியதை அடுத்து இன்று படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலருக்கு சிம்பு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை திருப்பித் தரும்வரை அவருக்கு ரெட் கார்ட் போடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தயாரிப்பாளர்களுடனான சுமூக பேச்சுவார்த்தையை தொடர்ந்து ரெட் கார்ட் தடையை நீக்குவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது படத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments