ஓணம் பண்டிகையால் விடப்பட்ட விடுமுறையால் கேரளாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு

0 3331

கேரளாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 31 ஆயிரத்து 445 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

மே மாதம் அதிகபட்சமாக 30 ஆயிரத்து 491 பேருக்கு தொற்று இருந்தது. தற்போது அதைவிட அதிகமாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 215 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கேரளாவில் இதுவரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது.

ஓணம் பண்டிகையால் விடப்பட்ட விடுமுறை காரணமாக அங்கு சோதனை செய்வதிலும், தடுப்பூசி போடுவதிலும் ஏற்பட்ட சுணக்கமே தற்போது தொற்று அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments