மீசையில்லா சிக்கந்தர் என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா ? கைப்புள்ளயான ரவுடிபேபி..!

0 11679
மீசையில்லா சிக்கந்தர் என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா ? கைப்புள்ளயான ரவுடிபேபி..!

யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக தனது பாய் பிரண்டை செருப்பால் அடித்த யூடியூப்பர் சூர்யாதேவியையும், அவரது ஆண் நண்பரையும் கைது செய்யாத போலீசை கண்டித்து  காவல் ஆணையர் அலுவலகத்தில் தர்ணாபோராட்டம் செய்யப்போவதாக டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா  தெரிவித்துள்ளார்

ஒரு காலத்தில் காலனாவுக்கு பிரயோசனம் இல்லாத லைக்குகளுக்காக டிக்டாக்கில் ஓடி ஆடி பிரபலமானவர் சுப்புலட்சுமி என்கிற ரவுடி பேபி சூர்யா, இவரது பாய் பிரண்டு சிக்கந்தர். இவர்கள் ஒரு யூடியூப் சேனல் நடத்திவரும் நிலையில் , சிக்கந்தரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் வைத்து செருப்பால் அடித்த யூடியூப்பர் சூர்யாதேவி, அதனை வீடியோ வாக பதிவு செய்து தனது யூடியூப்பில் வெளியிட்டார்

தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து சிக்கந்தர் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், குறிப்பிட்ட தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீசை மழித்துக்கொள்வேன் என்று போலீசுக்கு சீரியசாக சவால் விட்டார் சிக்கந்தர்

மீசைதானே மழித்தால் வளரபோகுது என்று போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்ததால் சிக்கந்தர் மீசையை மழிக்கும் நிலை ஏற்பட்டது. சூர்யாதேவி மீதோ அவரது ஆண் நண்பர் மீதோ போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் கைப்புள்ள போல என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா ? என்ற ரீதியில் தனது பாய் பிரண்டு மீசையில்லா சிக்கந்தருடன், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு சென்றார் ரவுடி பேபி சூர்யா. அங்குள்ள போலீசாரிடம் யூடியூப்பர் சூர்யாதேவி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல் ஆணையர் அலுவலகத்தில் தர்ணாபோரட்டத்தில் ஈடுபடுவேன் என்று எச்சரித்து விட்டு வந்திருப்பதாக தெரிவித்தார்

நாட்டுல உள்ள மக்களுக்கு ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அதைபற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், ஆரம்பத்தில் டிக்டாக்கில் ஆடிப்பாடி ஏட்டிக்குபோட்டியாக எகத்தாளம் பேசி போலீசில் சிக்கி சூடுபட்ட பூனைகள், தற்போது யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை கவரும் வகையில் வீடியோ பதிவிடும் போட்டியில் வீதியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலைக்கு வந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments