சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கு.. வேல்முருகன் எம்.எல்.ஏவுக்கு பிடிவாரண்ட்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., உள்பட 9 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது வேல்முருகன் உடன் வந்திருந்தவர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சூறையாடினர் என்பது வழக்கு.
இது தொடர்பாக வேல்முருகன் எம்எல்ஏ உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், விசாரணைக்காக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 5 பேர் மட்டுமே ஆஜராகினர். அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் ராஜேஷ் உட்பட 9 பேர் ஆஜராகவில்லை.
Comments