டெல்டா வைரஸ் தாக்கம் அதிகரித்ததால் தடுப்பூசி திறன் குறைந்ததா..?
டெல்டா மரபணு மாற்ற வைரசின் தாக்கம் அதிகரித்த பின்னர் தடுப்பூசியின் திறன் 91 ல் இருந்து 66 சதவிகிதமாக குறைந்து விட்டதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத் துறை தெரிவித்துள்ளது.
அதே நேரம் நோய் பரவலில் 3 ல் இரண்டு பங்கு அளவுக்கு குறைவு ஏற்படவும் தடுப்பூசி முக்கிய காரணம் என்பதால் தடுப்பூசிகளின் திறனை குறைத்து மதிப்பிடவில்லை எனவும் அது தெரிவித்துள்ளது. பிரிட்டன் மற்றும் இஸ்ரேலில் நடந்த ஆய்வுகளிலும் இது போன்ற முடிவுகள் வந்துள்ளது.
அமெரிக்காவில் இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோசை வரும் 20 ஆம் தேதி முதல் போட பைடன் நிர்வாகம் முடிவு செய்தாலும் அதற்கு, அங்குள்ள உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை இதுவரை அனுமதி வழங்கவில்லை.
Comments