கடலூர் ஆண்டிகுப்பம் பகுதியில் மனித கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க மக்கள் எதிர்ப்பு-அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு
கடலூர் மாவட்டம் ஆண்டிகுப்பம் பகுதியில் மனித கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் மனிதக்கழிவுகள் டேங்கர் லாரி மூலம் கெடிலம் ஆற்றில் கொட்டப்பட்டு வந்தது. இதனால், கெடிலம் ஆற்றில் மாசு அதிகரிப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, ஆண்டிகுப்பம் பகுதியில் மனித கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை பார்வையிட வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள், ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
மனிதக்கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், குடிநீர் மாசு ஏற்படும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளதாக கூறி போராட்டம் நடத்தினர். இதனால் சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
Comments