ஐஐடி கட்டுமானத் துறை வல்லுநர்கள் 10 பேர் புளியந்தோப்பு குடிசைமாற்று வாரியக் குடியிருப்புக் கட்டடத்தில் நேரில் ஆய்வு
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் தொட்டாலே உதிரும் வகையில் கட்டப்பட்டிருந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் தரம் குறித்து 11 பேர் கொண்ட ஐஐடி வல்லுநர் குழு ஆய்வு செய்தது.
தலைமை செயல் பொறியாளர் பத்மநாபன் தலைமையில் 11 பேர் கொண்ட ஐ.ஐ.டி குழுவினர், பகுதி வாரியாக பிரிந்து கட்டுமான பொருட்களின் தரம், வீடுகளின் அமைப்பு போன்றவற்றை தொழில்நுட்ப கருவிகள் உதவியுடன் ஆய்வு செய்தனர். 3 வாரங்களுக்கு பிறகு ஆய்வறிக்கை அரசிடம் சமர்பிக்கப்படும் என ஐ.ஐ.டி. குழு கூறியுள்ளது.
இதனிடையே, ஐஐடி குழுவினர் சேதமடைந்த வீடுகளில் ஆய்வு செய்யவில்லை எனவும் பெயரளவில் மட்டுமே ஆய்வு செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ள கே.பி.பார்க் குடியிருப்புவாசிகள், வீடுகளுக்கு உள்ளே வந்து முறைப்படி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments