B.E., B.Tech., படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு நிறைவடைந்ததை அடுத்து ரேண்டம் எண் இன்று வெளியீடு

0 5012
B.E., B.Tech., படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு நிறைவடைந்ததை அடுத்து ரேண்டம் எண் இன்று வெளியீடு

B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு ஆன்லைனில் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி தொடங்கியது. இதுவரை மொத்தமாக ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 171 பேர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர்.

இதில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தியிருப்பதாகவும், அவர்களில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 533 மாணவ-மாணவிகள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து முழுமையாக விண்ணப்பப்பதிவை பூர்த்தி செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் போன்ற விண்ணப்பப்பதிவு பணிகளை முழுமையாக பூர்த்தி செய்தால் தான் சம்பந்தப்பட்டவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments