ஜி 7 மாநாடு - தாலிபனுக்கு பொருளாதார ரீதியான தடை விதிக்கும் தீர்மானத்துக்கு சீனா ஆட்சேபம்
ஜி 7 நாடுகளின் மாநாட்டில் தாலிபனுக்கு பொருளாதார ரீதியான தடை விதிக்கும் தீர்மானத்துக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. தாலிபன்களின் செயல்பாடுகளைப் பார்த்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜி 7 நாடுகளின் மாநாடு காணொலி வாயிலாக நேற்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகள், நேட்டோ நாடுகள் உள்ளிட்டவை தாலிபனை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நிற்பதாக உறுதி எடுத்துள்ளன.
மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய போரிஸ் ஜான்சன், காபூலில் தாலிபன் அரசு அமைவது உறுதியாகிவிட்டதாகத் தெரிவித்தார். ஆப்கான் மக்களுக்கு ஜி7 நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அகதிகளுக்கு அடைக்கலம் தர வேண்டும் என்றும் ஜான்சன் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் உரை நிகழ்த்திய அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் வெளியேற்றத்துக்கான தேதியை நீட்டிக்க தாலிபனை வலியுறுத்தும்படி பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கேட்டுக் கொண்டன. ஆனால் ஆகஸ்ட் 31க்குள் வெளியேற்ற நடவடிக்கையை முடிக்க இருப்பதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இதுவரை அமெரிக்க 75 ஆயிரத்துக்கும் அதிகமானோரை காபூலை விட்டு வெளியேற்றி இருப்பதாகவும் கூறினார். வெளியேற்ற நடவடிக்கையில் தாமதம் செய்தால் , ஐ.எஸ் தாக்குதல் போன்ற ஆபத்துகள் இருப்பதாகவும் ஜோ பைடன் சுட்டிக் காட்டினார்
காபூல் விமான நிலையத்துக்கு வருவோரைத் தடுக்கக் கூடாது என்றும் அனைவருக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது. காபூல் விமான நிலையத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது. இ
தனிடையே தாலிபனுக்கு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற ஜி 7 நாடுகளின் ஒருமித்த குரலுக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
Comments