கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த வழக்கு : கொடி நடும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் கைது

0 3162

விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த வழக்கில் கொடி நடும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளான்.

விழுப்புரத்தில், கடந்த 20 ஆம் தேதி சாலையோரம் கட்சிக் கொடிக்கம்பம் நட்டபோது, உயர் அழுத்த மின் கம்பியில் உரசி மின்சாரம் தாக்கியதில், தினேஷ் என்ற சிறுவன் உயிரிழந்தான்.

இந்த வழக்கில் பள்ளி மாணவனை கட்டாயப்படுத்தி, கட்சிக் கொடிக் கம்பம் நடும் பணிக்கு அழைத்துச் சென்றதாக ஒப்பந்ததாரர் வெங்கடேசன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அஜாக்கிரதையாக வேலையில் ஈடுபடுத்தி இறப்பு ஏற்படுத்துதல் மற்றும் கட்டாயப்படுத்தி வேலையில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments