அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் முறையில் பாடம் நடத்த தனியாருக்கு அனுமதி

0 3589

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் முறையில் பாடம் நடத்த தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களை WhatsApp & Google Meet-ல் நடத்த அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளதாகவும், மேலும் 18 மாவட்டங்களில் Science Centre, Mobile Science Lab ஆகியவற்றை அமைக்கவும் அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி கல்வித்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments