ஓ.டி.டி. தளத்துக்கான படத்தில் நடிக்க லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு ரூ. 223 கோடி சம்பளம்
ஓ.டி.டி. தளத்துக்காக பிரத்யேகமாக தயாராகி வரும் டோண்ட் லுக் அப் திரைப்படத்தில் நடித்ததற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 223 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.
சமீபத்தில் ஓடிடி தளங்களுக்கென பிரத்யேகமாக படங்கள் தயாரிப்பது அதிகரித்து வருவதால் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் அதில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில், பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, ஆடம் மெக்கே இயக்கத்தில் தயாராகும் டோண்ட் லுக் அப் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நடிக்க அவருக்கு இந்திய மதிப்பில் 223 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. படத்தில் கதாநாயகியான ஜெனிபர் லாரன்சுக்கு 186 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
Comments